ஓப்ஜக்ட்- ஒரியன்டட் எண்ணக்கருObject என்றால் ஒரு பொருள் இது எம்மைச்ச10ழவுள்ள ஒன்றாகவிருக்கமுடியும். உதாரணமாக எமது சஞ்சிகையை கருதுவோம் அதன் ஒப்பஜட்களாக சஞ்சிகை வாசகர் ஆசிரியர் எழுத்தாளர் குழாம் இன்னும் அதனுடன் சம்மந்தப்பட்ட அதற்கு தேவையான அனைத்தையும் ஒப்ஜட்களாக கருதலாம். நீங்கள் ஒரு செய்நிரலை உருவாக்கும் போது ஒப்ஜட்களை உருவாக்கி அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தமுடியம்
ClassClass எனப்படுவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்ஜட்களை தன்னகத்தே உள்ளடக்ககூடிய ஒரு தளமாகும் (Template)
SubclassSubclass ஆனது parent class இன் அனைத்து இயல்புகளையும் , வளங்களையும் எடுத்துக் கொள்ளக்கூடிய அதே நேரம் parent class இல்லாத இயல்புகளையுடைய இன்னும் சில ஒப்ஜட்களை மேலதிகமாக கொண்டிருக்கும்
ObjectObject கள் class வரையரையைக் கொண்டிருக்கும் அதேவேளை ஒரே மாதிரியான இயல்புகளைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களை கொண்டிருக்கும்.
ஓப்ஜக்ட் ஒன்றை உருவாக்குதல் public class SampleObject
{
int object1,object2;
}
Sampleobject class இன் object ஒன்றை இன்னுமொரு class இனுல் உருவாக்குதலும் run செய்தலும்
public class RunSampleObject
{
public static void main (String [] arg)
{
SampleObject so = new SampleObject();
so.object1=10;
so.object2=20;
int totalobject=so.object1+ so.object2;
System.out.println("Totalobjectis ="+ totalobject);
}
}
Operators(இயக்கிகள்)இயக்கிகள் விசேடமான தொழிற்பாட்டினை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
ஜாவாவில் மிக அதிகளவில் Arithmetic Operators, Relational Operators, Boolean Operators ,String Operators, Bitwise Operators ,Assignment Operators என்பன பயன்படுத்தப்படுகின்றன.
Arithmatic Operatorsஎண்கணித இயக்கிகள்)தன்னியக்க பின்னதிகரிப்பு(மாறி++)
தன்னியக்க பின் குறைவு(மாறி--)
தன்னியக்க முன்னதிகரிப்பு(++மாறி)
தன்னியக்க முன் குறைவு(--மாறி)
பெருக்கல்(*)
பிரிப்பு முழு எண்(/)
பிரிப்பு மீதி(%)
கூட்டல் (+)
கழித்தல்(-)
Boolean Operators(பூலியன் இயக்கிகள்)NOT(!)
Boolean AND (&)
Boolean OR(|)
XOR (^)
Logical AND (&&)
Logical OR (||)
Relational Operators (சார்பு இயக்கிகள்)சார்பு பருமனை சோதித்தல் (>,<,>=,<=)
சமவலுக்களை சோதித்தல் (== )
சமனில்லாத வலுக்களை சோதித்தல் (!=)
நிபந்னை (?:)