Monday, December 15, 2008

கணனி மொழியின் அரசன் JAVA 05

Switch statements

தரப்பட்ட ஒரு பெறுதியின் மூலம் செய்நிரலின் பல பகுதிகளை இயக்கவேண்டியேற்படும் சந்தர்ப்பங்களில் switch statement பயண்படுத்தத முடியும்

swich (expresion)
{
case1 :
// statement
case2 :
// statement
default :
// statement

}

break and continue

இந்த இரண்டு திறவுச்சொற்களும் (key words) செயற்பட்டுக்கொண்டீருக்கும் செய்நிரலின் பகுதியை நிறுத்த(break) அல்லது தொடரச்செய்ய (continue) பயண்படுகிறது. Continue statement ஆனது loop ஒன்றினுல் மாத்திரமே பயண்படுத்தமுடியும் break statement ஐ loop ஒன்றினுள்ளோ அல்லது switch statement னுள்ளோ பயண்படுத்த முடியும்

import javax.swing.JOptionPane;
public class Sixth
{
public static void main (String [] arg)
{

String value;

value= JOptionPane.showInputDialog("Enter your No 1,2 or 3");

int no= Integer.parseInt( value );

//if(resultvalue>=75)
switch (no)
{

case 1: JOptionPane.showMessageDialog(null,"YOU Entered No : 1");

break ;

case 2:
JOptionPane.showMessageDialog(null,"YOU Entered No :2 ");

break;

case 3:
JOptionPane.showMessageDialog(null,"YOU Entered No :3 ");

break;
default :
JOptionPane.showMessageDialog(null,"YOU Entered Wrong No : ");
}
}
}






Arrays

சில வேளைகளில் செய்நிரல்கள் இயங்கிக்கொண்டிருக்கும்போது(run time environment) தகவல்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சேமிக்கவேண்டிய தேவையேற்படலாம். இதன்போது Arrays பயன்படுத்தப்படுகின்றன.
Java Arrays ஆனது முதன்மை தரவுகளின்(primitives) அல்லது மற்றைய தரவுகளின் ஒழுங்காக்கப்பட்ட தொகுப்புக்களாகும்.
array ஒன்றை அமைக்கும்போது மூன்று படிமுறைகளை பின்பற்றவேண்டும்.

முதலாவதாக வுரையறையொனறை பிரகடணப்படுத்தல் (Declaration)
array ஆனது மூலகத்தின் வகையை வரையறுப்பதுடன் ஆரம்பமாகும். array ஆனது object அல்லது primitives தரவு வுகைகளை கொண்டிருக்கும். இது பின்வருமாறு வரையறுக்கப்படும

primitives
int [ ] count;

Object
JButton [ ] button;


மேற்காட்டப்பட்டுள்ள உதாரணங்களிலிருந்து array ஒன்றை வரையறுக்கும்போது முதலாவதாக தரவுவகையும் அதனைத்தொடர்ந்து அடைப்புக்குறியும் அடுத்ததாக மாறி ஒன்றும் இடம்பெறவேண்டியது அவசியமென்பது தெளிவாகிறது

இரண்டாவதாக array ஒன்றை நிர்மாணித்தல்

Array ஒன்றின் object களுக்குத் தேவையான இடஓதுக்கீட்டை மேற்கொள்ளலானது array ஒன்றை ிர்மாணித்தலெனப்படும். அதாவது JVM மிற்கு தேவையான அளவு இடத்தை ஒதுக்குமாறு பெறுமானத்தின் மூலம் கூறுதலாகும் இதற்காக new எனும் Keyword ஐ தொடர்ந்து வரும் array யினது வகையுடன் அடைப்புக்குறிக்குள் தேவையானவனவு பெருமானத்தையிடவேண்டும்

அதாவது

int [ ] count = new int [10];

மேற்காட்டிய உதாரணத்தில் இட ஒதுக்கீடானது பின்வருமாறு அமையும்



array ஆனது எப்போதும் முதலாவது கலத்தை (cell space) 0 ஆக எடுத்துக்கொள்வதுடன் அதன் அனைத்து மூலகங்களும் அதனது மூலப்பெறுமானத்தை(default value) பெற்றுக்கொள்ளும்;.

மூன்றாவதாக array ஒன்றை ஆரம்பித்தல்
default value ற்கு மேலதிகமாக பெறுதியொன்றை ஏற்படுத்துதல் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும்.

int [ ] count = {1,2,3,4,5,6,7,8,9,10};

Multi Dimensional Array
Multi Dimensional Array ஆனது சாதாரன array களின் தொகுதிகளைக் குறிக்கும். ஓவ்வொறு array யும் அடைப்புக்குறியினால் வேறாக்கப்படும்

உதாரணமாக
int [ ][ ] count=new int[4][3] Two Dimensional Array

int [ ][ ] [ ] count=new int4][3] [2] Three Dimensional Array

Wednesday, November 19, 2008

கணனி மொழியின் அரசன் JAVA 04

if Statement

நிபந்தனை உண்மையாயின் (true) தன்னுள்ளே(if) வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றும். பொய்(false) யாயின் else பகுதியின் கட்டளைகளை நிறைவேற்றும்

1) if(boolean condition)
// single body statement




2) if(boolean condition)
{ // body statement }

else
{ //body statment}
}

பின்வரும் code னை டைப் செய்யவும்



import javax.swing.JOptionPane;
public class Fifth
{
static int option;
public static void main (String [] arg)
{

String result;

result= JOptionPane.showInputDialog("Enter your marks");

int resultvalue= Integer.parseInt( result );

if(resultvalue>=75)

JOptionPane.showMessageDialog(null,"Result is : A");

else if(resultvalue>=60)

JOptionPane.showMessageDialog(null,"Result is: B ");

else if(resultvalue>=40)

JOptionPane.showMessageDialog(null,"Result is : C");

else
JOptionPane.showMessageDialog(null,"Result is :F");

}
}

Output




Friday, November 14, 2008

கணனி மொழியின் அரசன் JAVA 03

For Loop

செய்நிரலில் ஒரே விடயத்தை(statement) பல தடவைகள் செய்யவேண்டியேற்படும்போது For Loop ஐ பிரயேகிக்க முடியும். For Loop ஐ உருவாக்குவது எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
for (initialization; condition; update)
{
// Body Statement
}

உதாரணமாக
for(int i=0; i<=5; i++)
{
System.out.println (“PC Times”);
}

For loop ஆனது செயற்பட ஆரம்பிக்கும் போது முதலாவதாவக ஆரம்பப்பகுதியை (initialization) நிரைவேற்றும் பின்னர் நிபந்தனை (condition) ப்பகுதியை சோதிக்கும் நிபந்தனை சரியாயின்;(true) உடற்பகுதியின்;(Body Statement) கட்டளைகளை நிறைவேற்றும். உடற்பகுதியின் கட்டளைகளை நிரைவேற்றிய பிறகு update பகுதியை நிறைவேற்றும் இதன் பிறகு மீண்டும் ஆரம்பப்பகுதிக்குச் செல்லும் இவ்வாறு நிபந்தனையை மீறும்வரை(false) தொடரும்.




Notepade திறந்து பின்வரும் code இனை type செய்யவும்
public class Third
{
public static void main(String [] arg)
{
for (int i=0;i<=5;i++)
{
System.out.println("PC TIMES");
}
}
}

இதன் விளைவு இவ்வாறு பெறப்படும்




public class QuickReview
{
public static void main (String arg[])
{
int sum=0;
for(int i=0;i<10;i++)
{
sum=sum+i;
System.out.println(sum);
}

}
}

மேலேயுள்ள செய்நிரலயனது 0 தொடக்கம் 9 வரையுள்ள முழுவெண்களின் கூட்டுத்தெகையை வெளிப்படத்துகிறது.


while loop

செய்நிரலில் ஒரே விடயத்தை (statement) பல தடவைகள் செய்யவேண்டியேற்படும் சமயத்திலும்; சரியாக முடிவுப்புள்ளியை தீர்மாணிக்க முடியாமலிருக்கும் சந்தர்ப்பங்களிலும் while loop ஐ பிரயேகிக்க முடியும். while loop ஜ உருவாக்குவதற்கான கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது

while (condition)
{
// Body Statement
}
உதாரணமாக
int count =1;
while (count<=3)
{
System.out.println (“PC Times”);
count = count+1;
}

while loop பற்றி மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் அதன் தொழிற்பாடாகும். அதாவது நிபந்தனை பகுதியினது முதலாவது நிபந்தனை பொய்யாயின் ஒருபோதும் தொழிற்படமாட்டாது என்பதை நினைவில்கொள்ளவும். நிபந்தனை உண்மையாயின் While loop இன உடற்பகுதியின் முதலாவது statement டிலிருந்து நிறைவேற்ற ஆரம்பிக்கும்
இவ்வாறு நிபந்தனை பொய்யாகும் வரை நடைபெறும்.

while loop இன் தொழிற்பாடு

While loop இன் தொழிற்பாட்டை மேலும் தெளிவாக விளங்கிக்கொள்வதற்கு கீழேயுள்ள code னை run செய்யவும்

public class Fourth
{ public static void main (String [] arg)
{
int count=1;
int sum=0;
while(count<5)
{
sum= sum+count;
System.out.println(sum);
count= count+1;
}
}
}
Out Put




do - while loop

நிபந்தனையை சோதிக்கமுன் உடற்பகுதி செயற்படவேண்டுமாயின் do – while loop பயண்படுத்தப்படும். do – while loop ஆனது மிக குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.

do
{
// Body Statement
}
while (condition);
உதாரணத்திற்கு

do
{

System.out.println("Reserve 1");
System.out.println("Check Amount 2");
System.out.println("Exit 0");
System.out.println("Choose the Option");

} while(option!=0);

இங்கு தெரிவு செய்யப்படும் option ஆனது 0 சமனாகும்போது loop ஆனது வெளியேறும்

Monday, November 10, 2008

கணனி மொழியின் அரசன் JAVA 02

ஓப்ஜக்ட்- ஒரியன்டட் எண்ணக்கரு
Object என்றால் ஒரு பொருள் இது எம்மைச்ச10ழவுள்ள ஒன்றாகவிருக்கமுடியும். உதாரணமாக எமது சஞ்சிகையை கருதுவோம் அதன் ஒப்பஜட்களாக சஞ்சிகை வாசகர் ஆசிரியர் எழுத்தாளர் குழாம் இன்னும் அதனுடன் சம்மந்தப்பட்ட அதற்கு தேவையான அனைத்தையும் ஒப்ஜட்களாக கருதலாம். நீங்கள் ஒரு செய்நிரலை உருவாக்கும் போது ஒப்ஜட்களை உருவாக்கி அதனை தேவையான இடத்தில் பயன்படுத்தமுடியம்
Class
Class எனப்படுவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்ஜட்களை தன்னகத்தே உள்ளடக்ககூடிய ஒரு தளமாகும் (Template)
Subclass
Subclass ஆனது parent class இன் அனைத்து இயல்புகளையும் , வளங்களையும் எடுத்துக் கொள்ளக்கூடிய அதே நேரம் parent class இல்லாத இயல்புகளையுடைய இன்னும் சில ஒப்ஜட்களை மேலதிகமாக கொண்டிருக்கும்
Object
Object கள் class வரையரையைக் கொண்டிருக்கும் அதேவேளை ஒரே மாதிரியான இயல்புகளைக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களை கொண்டிருக்கும்.
ஓப்ஜக்ட் ஒன்றை உருவாக்குதல்
public class SampleObject
{
int object1,object2;

}
Sampleobject class இன் object ஒன்றை இன்னுமொரு class இனுல் உருவாக்குதலும் run செய்தலும்

public class RunSampleObject
{
public static void main (String [] arg)
{
SampleObject so = new SampleObject();
so.object1=10;
so.object2=20;
int totalobject=so.object1+ so.object2;
System.out.println("Totalobjectis ="+ totalobject);
}
}



Operators(இயக்கிகள்)
இயக்கிகள் விசேடமான தொழிற்பாட்டினை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
ஜாவாவில் மிக அதிகளவில் Arithmetic Operators, Relational Operators, Boolean Operators ,String Operators, Bitwise Operators ,Assignment Operators என்பன பயன்படுத்தப்படுகின்றன.

Arithmatic Operatorsஎண்கணித இயக்கிகள்)

தன்னியக்க பின்னதிகரிப்பு(மாறி++)
தன்னியக்க பின் குறைவு(மாறி--)
தன்னியக்க முன்னதிகரிப்பு(++மாறி)
தன்னியக்க முன் குறைவு(--மாறி)
பெருக்கல்(*)
பிரிப்பு முழு எண்(/)
பிரிப்பு மீதி(%)
கூட்டல் (+)
கழித்தல்(-)
Boolean Operators(பூலியன் இயக்கிகள்)
NOT(!)
Boolean AND (&)
Boolean OR(|)
XOR (^)
Logical AND (&&)
Logical OR (||)

Relational Operators (சார்பு இயக்கிகள்)

சார்பு பருமனை சோதித்தல் (>,<,>=,<=)
சமவலுக்களை சோதித்தல் (== )
சமனில்லாத வலுக்களை சோதித்தல் (!=)
நிபந்னை (?:)

Friday, November 7, 2008

கணனி மொழியின் அரசன் JAVA 01

sun.micro.com/java/download என்ற இனையத்தளத்திற்குச் சென்று J2SE SDK1.5.0 என்கின்ற என்கின்ற development kit ஐ பதிவிறக்கம் செய்து உங்களது கணனியில் நிறுவிக்கொளள்ளுங்ள.; நீங்கள் எழுதும் புரோகிராம்களை ரன் செய்வதற்காக Java தற்காலிக கணணியை (JVM) இயக்குவதற்கு Path ஐ சரிசெய்துகொள்;ள எனது கணணியில் ; (My Computer) வலது சொடுக்கல் (Right Click) செய்து வரும் திரையில் Advanced Tab ஐ கிளிக் செய்து அதனூடாக திறக்கப்படும் திரையில் Enviorement Variables ஐ கிளிக் செய்யவும். ; திறக்கப்படும் திரையில் நியு ; பட்டினை கிளிக் செய்யவும தோண்றுகின்ற new user variable திரையில் variable name எனுமிடத்மில் path என்றும் variable value எனுமிடத்தில் உங்களது கணனியில் ஐhவா நிருவப்படடிருக்கும் பாத்தை( c:\program File\java\jdk1.5.0\bin) டைப் செய்து ok செய்யவும். நீங்கள் எழுதும் ; program களை save செய்வதற்காக java எனும் folder ஒன்றை c யில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.(மௌசை வலது செடுக்கல் செய்து வரும் திரையில் நெற new folder என்பதை கிளிக் செய்யவும்).

உங்கள் முதலாவது Java Program ஐ எழுத நீங்கள் தயார். ஆனால் எங்கே Programm களை எழுதுவது? C++, VB போல் தனியான ஒரு Tool இல்லையே! கவலையை விடுங்கள். Java Programm களை எழுத உங்களுக்குத் தேவை ஒரு Text எடிடர் மாத்திரமே. Example: Notepad, WordPad…..) அதில் டைப் செய்யும் புரோங்களை .java என்ற Extention உடன் சேமிப்பதன் மூலம் Source File களையும் javac Filename.java எனும் கட்டளை முலம் Class File களையும் உருவாக்கிக் கொளள முடியும்.

இனி என்ன யோசனை உங்கள் முதலாவது Programm ஐ எழுதுங்கள்


public class MyFirst

{

public static void main ( String [] args )

{

System.out.println ( “ Hello Java I am ");

}

}


File save as சென்று save in ல் தேவையான ((java என நீங்கள் உறுவாக்கிய folder ஐ) இடத்தை தெரிவு செய்து file name எனும் இடத்தில் MyFirst.java எனவும் save as type ல் all files என்பதை தெரிவு செய்து save செய்யவும்.
இனி
Start menu சென்று run எனும் கட்டளையை கிளிக் செய்து வரும் திரையில்
cmd என டைப் செய்து ok செய்யவும் கிடைக்கின்ற command prompt முலம் உங்களது folder ஐ திறந்து கொளள்ளுங்கள் (cd java என டைப் செய்து enter key அழுத்தவும்)
Compile செய்வதற்கு
javac MyFirst.java செய்வதற்கு என டைப் செய்து enter ஐ அழுத்தவும்
compile முடிந்தவுடன் run செய்வதற்கு java MyFirst என டைப் செய்து enter ஐ அழுத்தியவுடன் உங்களது dos prompt இவ்வாறு காட்சியளிக்கும்